நானும் நல்லது சொல்வேன்: “கதையும் கருத்தும் சார்ந்தக் கட்டுரைகள் (Tamil Edition)

Price: ₹49.00
(as of Sep 18,2023 18:55:28 UTC – Details)



“நான் நல்லது சொல்லுவேன்” என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியிருந்தால் , மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் நல்லது சொல்ல வில்லையா.?? என்ற கேள்வி பல வாசகர்களின் உள்ளத்தில் எழுந்திருக்கும். “நானும் நல்லது சொல்வேன்” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததால் , பல நல்ல
விஷயங்களை ஏற்கனவே சொன்ன நல்ல எழுத்தாளர்களோடு நானும் இணைந்து விட்டேன் என்ற அடக்கமான பதிலுடன் அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டேன். ஆனால் இந்த தலைப்பை நான் தேர்ந்தெடுத்ததற்கு இது ஒரு முக்கியமானக் காரணம் அல்ல, “ஊருக்கு நல்லது சொல்வேன்” என்ற தலைப்பில் ஐயா
“தமிழருவி மணியன்” அவர்களும், ஐயா சொல்வேந்தர் “சுகிசிவம்” அவர்களும் நூலை வெளியிட்டு பல நல்லக் கருத்துகளை மக்களுக்குச் சொல்லி அதில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளனர். அந்தப் புத்தகங்களை படித்த வாசகர்களுள் ஒருவனாக இருந்த எனக்குள்ளும், சில நல்ல விஷயங்களை மக்களுக்குச் சொல்ல
வேண்டும் என்ற ‘ஆர்வமும், ஆவலும்’ எழுந்தது, அதன் விளைவாகவே இந்த புத்தகத்தை நான் எழுதத் தொடங்கினேன். அவர்கள் ஏற்கனவே சொன்ன தலைப்பையும், கருத்துக்களையும் நான் இந்த நூலில் குறிப்பிடவில்லை, என் சிந்தனையில் தோன்றிய எனக்குத் தெரிந்த நல்ல செய்திகளை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்தத் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன் .

என் மனதில் பட்ட விஷயங்கள் உங்கள் மனதைத் தொட்டு விடும் என்ற எதிர்பார்ப்பில் தான் இந்த புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். “ஆரோக்கியம், ஆன்மீகம், அரசியல், மனிதம், அனுபவம்” போன்றத் துறைகளில் எனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை அதற்கேற்ற சில தலைப்புகளின் மூலம் “கதையும் கருத்தும் சார்ந்தக் கட்டுரைகளாக” இந்தப் புத்தகத்தை நிரப்பி உள்ளேன்.

சிந்தனையில் தெளிந்த,தெரிந்த விஷயங்களைச் சொல்வதால் ‘இதனைப் படிப்பவர்கள் எல்லாம் தெரியாதவர்கள் எனக் கருதி அவர்களை வசைபாடாமலும், ஏதோ ஒரு தரப்பைத் தூக்கிப் பிடித்து மற்றவர்களை மட்டமாகப் பேசாமலும், அதேசமயம் நடக்கும் நிகழ்வுகளில் உள்ள சிலக் குறைகளை சர்ச்சைக்குள்ளாகாத படியும் ,யார் மனதையும் புண்படுத்தாத அளவுக்கு கூடிய மட்டும் கவனம் செலுத்தியிருக்கின்றேன்’.

இந்நூலின் மூலம் எனக்கு முன்னோடியாக விளங்கிய பல நல்ல எழுத்தாளர்கள் சென்ற பாதையில் அவர்களோடு நானும் பயணிக்கிறேன் என்பதிலும் பெருமை கொள்கிறேன். வாசகப் பெருமக்களாகிய நீங்கள் இந்த நூலுக்கு கொடுக்கும் வரவேற்பைப் பொருத்து இதே தலைப்பில் மேலும் எழுத ஆவலாக உள்ளேன்

ASIN ‏ : ‎ B094V4FN46
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 377 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 103 pages

We will be happy to hear your thoughts

Leave a reply

Giringo
Logo
Shopping cart